விவாகரத்து குறித்த வதந்திக்கு ஷபானா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘செம்பருத்தி”. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா.
சமீபத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியல் செழியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவியது. இந்த வதந்தி குறித்து ஷபானா கூறியதாவது, ”இதுபோன்ற வதந்திகளை நம்பும் ரசிகர்களை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது” என கூறியுள்ளார். இந்நிலையில், இவர்களின் விவாகரத்து குறித்த வதந்திக்கு ஷபானா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.