கட்டிட ஒப்பந்ததாரர் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் தனியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கட்டிட ஒப்பந்ததாரரான தாமஸ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு பிற தொழிலாளர்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள் இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என தாமஸ் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் அழுது கொண்டு தெரிவித்துள்ளார். அதன் பின் அந்தப் பெண்ணின் கணவர் வால்பாறை காவல் நிலையத்தில் தாமஸ் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாமசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.