Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த தாயார்… 4 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு… வலை வீசி தேடும் போலீசார்…!!

4 வயது ஆண் குழந்தைக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பேரூர் பகுதியில் மணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து மணி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது ஆண் குழந்தைக்கு மணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாயார் சத்தம் போட்ட உடனே அங்கிருந்து மணி தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த குழந்தையின் தாய் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |