Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றமும் , உலக நாடுகளின் தண்டனையும்….!!

 பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் .

பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது .

Image result for பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் என்ன தண்டனை வழங்கப்படுகின்றது என்று காணலாம் .

இந்தியா :
கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு இந்தியா இந்திய குற்றவியல் சட்டம் 376_இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது . நிரூபையா வழக்கின் போது பலாத்காரத்தோடு கொலையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக  மரண தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .

Image result for பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு

சீனா : 
அண்டை நாடான சீனாவில் பாலியல் வன்கொடுமையில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையும் ,அவரின்  ஆணுறுப்பை வெட்டி எடுக்கப்படுவது சீனா தண்டனையின் ஒரு பகுதியாகும் .
ஈரான் :
ஈரான் நாட்டில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனையாக  பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்வது அல்லது தூக்கிலிடுவது போன்ற தண்டனை நிறைவேற்றப்படும் .
வடகொரியா :
வடகொரியாவில் பாலியல் வன்கொடுமைக்கு மன்னிப்பே கிடையாது . குற்றவாளியை சுட்டுக்கொல்ல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்நாட்டு சட்டம் அனுமதி அளித்துள்ளது  .
ஆப்கானிஸ்தான் :
ஆப்கானிஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்த நிரூபிக்கப்பட்டால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் குற்றவாளியின் தலையில் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட பெண் சுட்டு தண்டனையை நிறைவேற்றலாம் .
சவுதி அரேபியா :
சவுதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் .
எகிப்த் :
எகிப்தின் பாலியல் குற்றவாளிகள் நாட்டு மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள்.
ஐக்கிய அரபு நாடு:
ஐக்கிய அரபு நாடுகளில் பாலியல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஏழு நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிட்டுக் கொல்லப்படுவார்கள் .

அமெரிக்கா :

அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்க சட்டத்தில் இடமுள்ளது .

நெதர்லாந்து :

நெதர்லாந்து நாட்டில் மகளிருக்கு எதிரான எந்த செயலும் பாலியல் பலாத்காரமாகவே பார்க்கப்படும் .  ஒரு பெண்ணை விருப்பமின்றி முத்தமிட்டாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும்  .தவறு செய்தவரின் குற்றவாளிகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க நெதர்லாந்து சட்டத்தில் இடம் உள்ளது .

Categories

Tech |