Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. பால் வியாபாரி செய்த கேவலமான செயல்…. போக்சோவில் கைது செய்த காவல்துறை….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வியாபாரி  காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கருவேலன் கடை பகுதியில் வசித்து வருபவர் சுந்தரபாண்டியன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாகை மாவட்டத்தில் பாபா கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாடிக்கையாக பால் ஊற்றுவார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய சிறுமியை அவர் கண்டுள்ளார்.

அதன்பின் சுந்தரபாண்டியன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாத்தாவிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் சிறுமியின் தாத்தா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |