Categories
Uncategorized உலக செய்திகள்

இரவில் தூங்கி கொண்டிருந்த பெண்…. கதவை உடைத்த ஆண் நபர்…. விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!

வீட்டின் கதவை உடைத்து தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் நார்த் கரோலினாவின் சார்லோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி விட்டு இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜேசன் வெர்னான் என்ற இளைஞர் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதும் அதற்காக அவர் தண்டனை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |