Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிரபல தமிழ் நடிகை ..!!

தமிழ், மலையாளம் திரை  உலகில் பிரபல  நடிகையான நித்யா மேனன்,தான்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார் .
தமிழ், மலையாளம் திரையுலகில்  முன்னணி நடிகையாக திகழ்பவர்  நித்யா மேனன். இவருக்கென  தனி ரசிகர் கூட்டமே  உள்ளது. தற்போது,தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார் இப்படம்  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகும். இதற்காக ஜெயலலிதாவை போன்று மாறுவதற்கு பல சிறப்பு  பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , தான் எதிர்பாராமல் சினிமாவிற்கு  வந்ததாகவும் , ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் படத்தில் நடக்க விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடரவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்  தெரிவித்திருந்தார்.
மேலும்   “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும்  குறைவாக உள்ளது என்பது சரியானதல்ல . எல்லா துறைகளிலுமே பெண்களுக்கான பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர்  ஆபாசமாக என்னிடம்  பேசி தவறாக நடக்க முயறன்றனர் .
நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் மரியாதையாக  நடக்க தெரிந்துகொள்  என்று கடுமையாக கூறினேன். என்ன குற்றம்  நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும்  தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனை  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். மன தைரியத்துடன்  இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.

Categories

Tech |