Categories
உலக செய்திகள்

நான்கு வருடங்களாக…. செவிலியரை துன்புறுத்திய மருத்துவர்…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

இங்கிலாந்தில் செவிலியர் ஒருவரை நான்கு வருடங்களாக துன்புறுத்திய மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் லிங்கன்ஷையரில் உள்ள கிரிம்ஸ்பை  இடத்தில் டயானா பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக 61 வயதான ஹொஸாம் மெட்வாலி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கு வருடங்களாக தனது 33 வயது காதலியை கெட்ட சக்திகளிடம் இருந்து காப்பற்றுவதாக கூறி இஸ்லாமிய மத சடங்குகளை செய்வதற்காக தொடர்ந்து அந்த பெண் மீது வலி நிவாரண பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகளை செலுத்தி அவரை துன்புறுத்தியுள்ளார். மேலும் அதற்காக கெட்டமைன் மற்றும் ஃபெண்டானைல் ஆகிய மருந்துகளை வீட்டிலேயே வைத்து பயன்படுத்தியுள்ளார்.

இது போன்ற வீரியமிக்க மருந்துகளை அந்த பெண்ணின் உடலில் செலுத்தியதால் அவரின் முக்கியமான உறுப்புகள் செயலிழக்காமல் போகியுள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவர் உயிர் மட்டுமே உடலில் உள்ளது. குறிப்பாக ஹொஸாம் மெட்வாலி பணிபுரிந்த அதே மருத்துவமனையில் தான் கெல்லி வில்சன் செவிலியராக கடந்த 2013 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதனையடுத்து 61 வயதான ஹொஸாம் மெட்வாலிக்கும் 33 வயதான கெல்லி வில்சனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 28 வருடங்கள் தன்னை விட சிறிய வயது பெண்ணை நான்கு வருடங்களாக ஆபத்தான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி துன்புறுத்தியுள்ளார்.

இது மட்டுமின்றி அவரை 200க்கும் மேற்பட்ட வீடியோக்களாக எடுத்த ஹொஸாம் மெட்வாலியை கடந்த 2019 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இவர் மீதான குற்றங்கள் Sheffield Crown  நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றம் 14 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கை விசாரித்த போது இவரினால் மேலும் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அவர்களையும் ஆடையின்றி ஹொஸாம் மெட்வாலி ஆபாசமாக படம்பிடித்துள்ளார். அதற்கும் சேர்த்து ஹொஸாம் மெட்வாலிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |