Categories
உலக செய்திகள்

“நடு வானில் கோர விபத்து” பிரபல தொழிலதிபர் உட்பட 7 பேர் மரணம்.

ஸ்பெயின் நாட்டில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும்  நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆக்ஸ்ட்  இன் சில்வர் ஜூலியட் என்பவர் தனது பிறந்தநாளை கிழக்கு  ஸ்பெயினில் உள்ள பிரபல தீவு ஒன்றில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்ட நிலையில்,

Image result for helicopter flight crash

கடற்கரை நகரான இன்கவல் மேல் பறந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சிறிய விமானம் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து  ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலதிபர் குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் பிரான்சிஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |