கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில், 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,517ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,070 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளதால், இதுவரை சிகிச்சை பலனின்றி பலியானோரின் மொத்த எண்ணிக்கை 167ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 20 மாவட்டங்களில் மொத்தம் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.