செட் தோசை
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
பச்சரிசி -2 கப்
புழுங்கல் அரிசி- 2 கப்
உளுத்தம்பருப்பு- 2 கப்
தேங்காய் துருவல் -1 கப்
கேரட் துருவல்- 1 கப்
நறுக்கிய -கொத்தமல்லிசிறிதளவு
இட்லி மிளகாய்ப்பொடி -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
நெய் (அ) எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :
செட் தோசை செய்வதற்கு முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.பிறகு அவற்றை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாகக் கலந்து, அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு கலந்து வைத்துள்ள மாவை 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். பிறகு தோசைக் கல்லை சு டாக்கி, எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசையாக வார்த்து, அதன் மீது தேங்காய் துருவலைத் தூவி, சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், தோசையை எடுத்து தட்டில் வைக்கவும்.
இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி வெந்தவுடன் எடுக்கவும். பிறகு அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்கவும்.
இப்பொது ருசியான செட் தோசை ரெடி