Categories
தேசிய செய்திகள்

விரைவில் தொடங்க இருக்கும் சேவை… ரயில்வே பாதுகாப்புப்படை துணைத்தலைவர் அறிவிப்பு…!!

விரைவில் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்புபடை துணைத்தலைவர்  தெரிவித்துள்ளார்.

நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் 38பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இது குறித்து பேசிய ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து, சென்னை – கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Categories

Tech |