‘ மாறா’ படம் குறித்து கமெண்ட் செய்த ரசிகரிடம் மாதவன் மன்னிப்பு கேட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாறா’. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா சில தினங்களுக்கு முன் அமேசான் ப்ரைமில் வெளியானது . தற்போது வரை இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Oops . Sorry to disappoint you bro. Will try and do better the next time . 🙏🙏🙏 https://t.co/6euNuWFYhp
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 12, 2021
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் மாறா படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘சீரியஸாக மேடி இந்த படத்தை கெடுத்து விட்டார் . அத்தகைய சோகமான மற்றும் மனச் சோர்வடைந்த கதாபாத்திரம்’ என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த மாதவன் ‘உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும், அடுத்த முறை சிறப்பாக முயற்சி செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியான சார்லி படத்தை தமிழில் வெளியான மாறா அப்படியே பிரதிபலிக்க வில்லை என ரசிகர்கள் கருதுகின்றனர்.