Categories
சினிமா தமிழ் சினிமா

“சீரியல் நடிகை திவ்யா கொடுத்த புகார்” கைது செய்யப்பட்ட அர்னவிடம் விசாரணை நிறைவு….!!!!

சீரியல் நடிகை திவ்யா கொடுத்த புகாரில் அவரது கணவரான அர்னவை காவல்துறையினர் கைது செய்தனர். 

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அர்னவ்  புதிய தொலைக்காட்சி சீரியல் தொடரில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை  காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர்  காவல்துறை அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை காவல்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார். எனவே நேற்று (வெள்ளிக்கிழமை) காவல்துறை நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்னவ் மனு அளித்துள்ளார். கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் அர்னவ் படப்பிடிப்பு தளத்திலிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை காவல்துறை பூந்தமல்லி அருகிலுள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு காவல்துறை  நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையை காவல்துறை வாக்குமூலமாக பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அர்னவை ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |