Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு?…. முதல்வரிடம் அறிக்கை தாக்கல்…!!

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீர் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை குறைந்து வருகிறது.

இந்த காரணத்தால், 110 விதியின் கீழ் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இந்த குழு அமைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய குழு அமைக்கப்பட்டது.

கடந்த மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்ட இந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை செயலாளர்கள், ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், மருத்துவக்கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர். தற்போது, நீட் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |