Categories
அரசியல் மாநில செய்திகள்

வசூல் வேட்டைக்கு பேரம் பேசும் செந்தில்பாலாஜி.. ஆதாரம் இருக்கு.. அண்ணாமலை திட்டவட்டம்..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக மின்சார துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பாக வந்து பேசினீர்கள் என்றால்,  மின்சார கட்டணம் உயர்த்தியதை இவ்வளவு குறைப்போம். பெரிய, பெரிய குரூப்புகள் தனித்தனியாக வாருங்கள். டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் தனித்தனியாக வாருங்கள். மறுபடியும் தவறு மேல்,  தவறு செய்து அடுத்து யார் கிட்ட எவ்வளவு பணம் கேட்டார்கள் ?

யாரையெல்லாம் வர சொன்னாங்க ? எங்கெல்லாம் மீட்டிங் போட்டாங்க ?  அதையெல்லாம் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருவதற்கு வேண்டாம் என்று நினைக்கின்றோம். ஏனென்றால் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. திரும்பத் திரும்ப இவர்கள் ஊழல் பண்ணாங்க, ஊழல் பண்ணாங்கன்னு எத்தனை நாளைக்கு பேசுறது ? இதுவரை 30 தற்கொலைகள் நேரடியாக ஆன்லைனில் ரம்மி தான் காரணம் என்று காவல்துறையினுடைய பதிவுல பதிவாகி இருக்கிறது.

அப்படி இருக்கும்போது முதலமைச்சர் அவர்கள் நான் கருத்து கேட்கின்றேன் என்று, தொடர்ந்து என்ன கருத்து கேட்கின்றார் ? என்று நமக்கு தெரியவில்லை.ப்ரோ ஹெல்த் மிக்ஸ் ஸ்கேம் எல்லாம் போயி, இப்போது  மாநில அரசு கடைசியாக,  ஆவின் ஹெல்த் மிக்ஸ்சை தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள். இதை தான் முதலில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

அதனால் மாநில அரசுக்கு, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றியை சொல்லி,  அந்த டென்டர்ல அவங்க கஷ்டப்பட்டு மாற்றி இன்னொருவருக்கு கொடுப்பதெல்லாம் விட்டுவிட்டு,  உடனடியாக ஆவின் ஹெல்த் மிக்ஸ்சினுடைய பவுடருக்கே டெண்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |