Categories
அரசியல்

கூட்டத்தில் மாட்டிக்கொண்ட செந்தில்பாலாஜி… முற்றுகையிட்டு போராட்டம்… என்ன நடந்தது…?

தி.மு.க சார்பாக நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை வழிமறித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு மாவட்டத்தின் திமுக சார்பாக வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விட்டு பேசினார்.

நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வெளியில் சென்ற அவரை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.கவை சேர்ந்த நபர்கள் வழியில் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால்,  கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்ட அமைச்சரை கூட்டத்திலிருந்து வெளியேற்ற நிர்வாகிகள் போராடினர்.

அதன் பின் ஒரு வழியாக நுழைவு வாயிலில் நின்ற வாகனத்தில் ஏறி சென்றார். அப்போதும், அவரின் வாகனத்தை வழிமறித்து, எங்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு ஏன் கொடுக்கப்படவில்லை? என்று கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |