Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘செஞ்ச தப்ப திரும்ப செய்றாங்க ‘….அதுதான் தோல்விக்கு காரணமா இருக்கு … சிக்கித்தவிக்கும் ஹைதராபாத் அணி…!!!

நடந்த  இரண்டு போட்டிகளிலும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ,தோல்வியடைதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் .

நேற்று நடந்த 9 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின .இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில்  ஹைதராபாத்தை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கைப்பற்றியது.முக்கியமாக மும்பை அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்ததே வெற்றிக்கு காரணமாக இருந்தது .மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை  எதிர்கொள்ள முடியாமல் ஹைதராபாத் அணி திணறியது. எனவே 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததற்கு கடும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன .

இதற்கு முன் நடந்த போட்டியில், மிடில் ஆர்டரில் சரியாக விளையாடாததே ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. தற்போது அதே தவறை நேற்று நடந்த போட்டியிலும், ஹைதராபாத் அணி மிடில் ஆர்டரில் தவறிவிட்டது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன் விளையாட வைக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் நேற்று நடந்த போட்டியில் கேன் வில்லியம்ஸ் இடம் பெறவில்லை. இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |