Categories
மாநில செய்திகள்

“செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை” ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் இரவு 9:30 மணி அளவில் செங்கோட்டையை வந்தடையும்.

அதன் பிறகு மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணி அளவில் புறப்படும் விரைவு ரயில் மாலை 5:30 மணி அளவில் மயிலாடுதுறையை சென்றடையும். மேலும் 14 பெட்டிகளுடன் இயங்கும் இந்த விரைவு ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர் மஞ்சத்திடல், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Categories

Tech |