Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் திடீர் சோதனை …. மொத்தம் 210 லிட்டர் …. ஒருவர் கைது ….!!!

 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம்  பதுக்கி வைத்திருந்த நபரை  போலீசார் கைது செய்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள  மேலகாவலக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சூளையில் 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சாராயத்தை பதுக்கி வைத்திருந்த ஆந்தகுடி அறுபதாம் கட்டளையை சேர்ந்த பழனிவேல் என்பவரை கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை  கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய  மேலகாவலக்குடியை சேர்ந்த சார்லஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |