செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களுக்கு வீடு இருக்கிறதா? ஆற்று மணலை அள்ளி மலையை நொறுக்கி தான் வீடு கட்டினார்களா? ஏன் ஆற்றில் மணல் இல்லாமல் மலைக்கு வந்தீர்கள் ? 32 ஆண்டுகளில் மணல் எங்கே? தமிழ்நாட்டு மக்களின் மணல் தேவைக்கு மட்டும் தான் மணல் அள்ளபட்டதா?
கேரளாவிற்கு கடத்தப்பட்டது, ஆந்திராவிற்கு கடத்தப்பட்டது, கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டது, இந்தியாவினுடைய எல்லா மாநிலங்களுக்கும் அள்ளி விற்றீர்கள், வெளிநாடுகளுக்கு குறிப்பாக… அரபு நாடுகளுக்கு மணல் கடத்தினீர்கள், அதெல்லாம் என்ன செயல் ?
கட்டுமானத்திற்கு மணல் எடுக்கின்றோம் என்று, மலையை நொறுக்கி வீடு கட்டிட்டு எப்படி வாழ்வீர்கள்? நீங்கள் அளவாக எடுங்கள், டாஸ்மார்க்கை விற்கின்ற நீங்கள்…. ஆற்று மணலை அளந்து, மூன்று அடி தான் அள்ள வேண்டும் என்று அரசு சட்டம் போட்டிருக்கிறது. 30 அடி அள்ளி விற்பனை செய்கிற வரைக்கும் நீங்கள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?
வெளியில் குளத்தை வெட்டாமல், ஏரியை வெட்டாமல், ஆற்றில் வெட்டினார்கள் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எதற்கு தனியார் முதலாளிக்கு கொடுத்தீர்கள்? அரசே பொறுப்புணர்வோடு 3 அடிக்கு அள்ளி இருக்க வேண்டும் அல்லவா. அப்படி அள்ளி இருந்தால், இன்னும் 300 ஆண்டுக்கு கடத்திருக்கலாம், இந்த மணலை..
மலையை போய் கை வைக்க வேண்டிய தேவை வந்திருக்காது. இப்பவும் இந்த மலை மணல் சவுதி அரேபியாவிற்கு, துபாய்க்கு அரபு நாடுகளுக்கு ஏற்றப்படுகிறதா இல்லையா? அங்கு வேலை செய்கின்ற நிறுவனத்தில் என் கட்சிக்காரர்கள் வேலை செய்கிறார்கள், நம் மலை மணல் பாருங்கள் இந்த பையில்ல இருக்கு என்று எனக்கு அனுப்புகிறார்கள். தீர்வு இவர்களை தூக்கி அதே குழிக்குள் மூடுவதை தவிர வேறு என்ன தீர்வு இருக்கிறது? மணலை அள்ளி விற்பதற்கு தானா? கிராமங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் மணல் தேவைப்படுகிறதா? என விமர்சனம் செய்தார்.