டிக்டாக், ஹலோ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் லிங்குகளை அனுப்பி டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டால், அந்த தவறை செய்யாதீர்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். அதன்படி, பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படும் 59 சீன செயலிகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாகவும் அவைகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும் மத்திய அரசிடம் பரிசளிக்கப்பட்டது. இந்த பரிசோதனையை ஏற்ற மத்திய அரசு அந்த செயலிகளை தடை செய்தது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் பயன்படுத்தலாம் என்று கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளை டவுன்லோட் செய்வதற்கான லிங்குகள் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனை உண்மை என நம்பி டிக்டாக் பிரியர்கள் பலரும் அதனை டவுன்லோட் செய்ய ஆரம்பித்து உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சைபர் கிரைம் துறை மத்திய அரசுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுபோன்று செயலிகளுக்கான லிங்க்குகள் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் பணத்தை பெறலாம்,
ஆஃபரில் மொபைல்கள் என ஆசையை தூண்டி எந்த லிங்க் வந்தாலும், அதை க்ளிக் செய்து உள்நுழைந்து விடாதீர்கள். அதன் மூலம் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய டேட்டாக்கள் திருடபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே டிக் டாக் பெயரைக் கொண்டு பலர் அதனை டவுன்லோட் செய்வதற்கான லிங்குகளை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதனை க்ளிக் செய்தவர்களின் தகவல்கள் திருடு போயுள்ளது. எனவே உங்களது தரவுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள இது போன்ற அன் ஆபீஷியல் லிங்குகளை கிளிக் செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.