2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை ஒட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இந்த சுற்றறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வரக்கூடிய 2023 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி, அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களுடைய அலங்கார ஊர்திகளும் இதில் இடம்பெறும். அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள். சுதந்திர போராட்டம், 75 ஆண்டு கால சாதனைகள் என பல்வேறு தலைப்புகளில் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். மத்திய அரசின் தேர்வு குழு அலங்கார உறுதி பட்டியலில் இறுதி செய்யும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட பாரதியார், வேலுநாச்சியார், வ.உ சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் இருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு, விரைவில் அனுப்பப்படும் என்று தெரிகிறது.