விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி” சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கல்யாணம் முடிந்ததும் ராதிகாவுடன் கோபி கொடைக்கானலுக்கு ஹனிமூன் வர, பாக்கியாவும், மூர்த்தி குடும்பமும் வருகின்றனர். கோபியை ராதிகாவுடன் ஒரே ரூமில் பார்த்து அதிர்ச்சியடையும் மூர்த்தி நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றான். ஒரே கட்டத்திற்கு மேல் கோபி கோபத்துடன் இவ நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி. இவளை பார்த்து யாருன்னு கேட்கிற. மொத வெளிய போ என கத்துகின்றான்.
பின்னர் மூர்த்தியும், கண்ணனும் அதிர்ச்சியடைய எழில் அவர்களை அழைக்கின்றான். தகுதியே இல்லாதவங்க கிட்ட எதுக்கு பேசிக்கிட்டு, வாங்க போகலாம் என சொல்கின்றான். அதற்கு கோபி, மொத கூட்டிட்டு போடா. வேலை வெட்டி இல்லாம இங்க வந்து கத்திட்டு இருக்கீங்க என சொல்கின்றான். உடனே எழில் இதே வார்த்தையை என்னால சொல்ல முடியும் எனக்கூற கோபி அதிர்ச்சியடைகின்றான். அவர்களை சமாதானம் செய்து அழைத்து வருகின்றான் எழில். மூர்த்தி, கண்ணனிடம் வெளியில் வந்து நடந்த அத்தனை விஷயங்களையும் கூற அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
அதன் பின்னர் அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்று பாக்யாவுக்கு ஆறுதல் சொல்கின்றனர். கோபி ஹனிமூன் வந்த விஷயம் கேட்டு கோபத்தில் கொந்தளிக்கின்றார் இராமமூர்த்தி. அதேபோன்று இந்தப்பக்கம் ராதிகா மொத்தமாக பெட்டியை கட்டி நான் தனியா சென்னைக்கு போறேன் என கூறுகிறாள். உடனே கோபி அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய, உங்களுக்காக நான் எங்கெல்லாம் அசிங்கப்படுறது. நான் அப்படி என்னை தப்பு பண்ணேன்.
உங்களை நான் கல்யாணமே பண்ணி இருக்கக்கூடாது. நான் இங்க இருந்து கிளம்புறேன் என கூற, கோபி அவள் முன்னாடி மண்டி போட்டு இங்கயே இரு ராதிகா. நம்ம கல்யாணம் பண்ணி இப்போதான் ஹனிமூன் வந்து இருக்கோம். தயவுசெய்து இங்கயே இருக்கலாம். நம்ம வேற ஏதாவது ஹோட்டல் போகலாம் என கூறுகிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். இந்தப்பக்கம் பாக்யாவை கிளம்பலாம் என சொல்ல எழிலும், மாமானாரும் அவனுக்காக நம்ம ஏன் கிளம்பி போகணும். நம்ம இங்கதான் இருக்கணும் என கூறுகிறார்கள். இதனை அடுத்து அடுத்தடுத்து எபிசோடுகள் பரபரப்புடன் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.