Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்(SSY) (அ) PPF ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இச்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். 12 சிறு சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொறுத்தவரையிலும் தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இதில் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டமும் ஒன்றாகும்.

மகள்களின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதற்கிடையில் நீண்டகாலமாக அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்படவில்லை. மே மாதம் முதல் தற்போது வரையிலும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதமானது 2.25% அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் பல வங்கிகள் கடனுடன் FD மீதான வட்டியையும் அதிகரித்தது. எனினும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை அரசு அதிகரிக்கவில்லை. ஆகவே டிசம்பர் மாதத்துடன் முடிவடையக்கூடிய காலாண்டில் வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வட்டி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு இந்த வாரத்திலேயே வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |