திமுகவின் மறந்த இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு வரும்போது… கிருஷ்ணசாமி அண்ணன் அவர்களும், நாசர் அண்ணன் அவர்களும் முதல் கோரிக்கை வைத்து விட்டார்கள். ஆவடிக்கு ஸ்டேடியம் வேண்டுமென்று… நான் கூட கேட்டேன்… மினி ஸ்டேடியம் தானே என்று… எங்களுக்கு மினி ஸ்டேடியம் எல்லாம் பத்தாது, இடத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம்…
அதற்கான சட்டமன்ற உறுப்பினர் நிதி கொடுத்து விடுவார், அதே மாதிரி கிருஷ்ணசாமி அவர்களும் கொடுத்து விடுவார்.. நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நம்முடைய நிதித்துறை அமைச்சர் PTR அவரிடம் சொல்லி, ஒருங்கிணைத்து, கண்டிப்பாக ஒரு அமைச்சராக அந்த வாக்குறுதியை இந்த நேரத்தில் கொடுக்கிறேன். ஏனென்றால் அமைச்சராக பொறுப்பேற்றதும் நான் சொன்ன முதல் விஷயம் நம்முடைய சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னதுதான்…
234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காகன பணிகளை முடக்கி விடுவேன் என்று சொல்லி இருந்தேன், அந்த முயற்சியில் நான் கண்டிப்பாக விரைவில் ஈடுபடுவேன் என்று கூறிக்கொண்டு.. நம்முடைய நாசர் அண்ணன் அவர்கள்.. எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வார். இது இனமான பேராசிரியர் தாத்தா அவர்களுடன் நூற்றாண்டு நினைவு விழா நிகழ்ச்சி. அண்ணன் நாசர் சொன்னது போல….
உலகத்திலேயே எந்த கட்சியாவது ஒரு மறைந்த தலைவருக்கு ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 இடங்களில் அவருடைய புகழை போற்றுகின்ற அளவிற்கு ஒரு நிகழ்ச்சி எந்த இயக்கத்திலும் இருக்காது. அந்த அளவிற்கு நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்களும், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் அவர்கள் இரண்டு பேரும் என பெருமையாக தெரிவித்தார்.