‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரம்மாஸ்திரம்”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், ‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை 445 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.