அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார்.
இதனையடுத்து, படப்பிடிப்பிற்கு நடுவே இவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, லடாக் போன்ற நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில், இவர் புத்தர் சிலை முன்பு நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ”அமைதிக்கு முன் ஒரு புயல்” என பதிவிட்டுள்ளார்.
A Storm before the calm 🤩🤩🤩🤩🤩😍😍😍😇😇😇🤩🤩🤩🤩 pic.twitter.com/yhRZufalFP
— VigneshShivan (@VigneshShivN) October 13, 2022