Categories
இந்திய சினிமா சினிமா

செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!

கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர்.

இந்நிலையில் இந்தி நடிகர் அமீர்கான் வித்தியாசமான முறையில் உதவி செய்தார். ஏழை எளிய மக்களுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று கூறினார். அவர் சொன்னதை பலரும் பெரிய அளவில் நினைக்காமல், அலட்சியமாக நினைத்து எடுத்து செல்லாமல் இருந்தனர்.  ஆனால் ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லாத மக்கள்தான் அதை வாங்குவதற்கு சென்றனர்.

வாங்கி வீட்டிற்கு சென்று சப்பாத்தி செய்வதற்கு அப்பொட்டலத்தை திறந்த அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் இருந்த்தது. என்னவென்றால், அந்த கோதுமை பாக்கெட்டுகளில் ரூ. 15 ஆயிரம் இருந்தது. அதை அவர்கள் பார்த்ததும் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி அவர்களுக்குள். ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்றவுடன் உண்மையான ஏழை மக்கள் மட்டுமே வாங்கி செல்வார்கள் என்று முடிவு செய்து இம்முறையில் உதவி செய்திருக்கிறார் என்று பலரும் அமீர்கானை பாராட்டி வருகின்றனர்.

கோதுமை பாக்கெட் வழங்கிய அவரது உதவியாளர்களுக்கு கூட உள்ளே பணம் இருந்தது தெரியாது என்பதும் குறிப்பிட தக்கது.

 

Categories

Tech |