Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள,அரண்மனை2, கத்திச்சண்டை இமைக்கா நொடிகள் கோமாளி மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நடிக்கும் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி | Hip Hop  Tamizha Adhi joins with Director A R K Saravanan next movie |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil

தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் ரேணுகாபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தயில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |