ரவீனா தாஹா புதிய காருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம் 2’. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. இவர் ராட்சசன், ஜில்லா போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் நடித்துவரும் சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவர் புதிதாக கார் வாங்கியுள்ளார். இந்த காரை இவர் 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காருடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.