காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இதனைத் தொடர்ந்து விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியா அகர்வால் திருமணம் செய்தார். அதற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2010-ஆம் வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனை பற்றி சோனியா அகர்வால் பேசியுள்ளார். அதில் “செல்வராகவன் எப்போதும் வேலைகள் மீது கவனம் செலுத்தி கடினமாக உழைக்க கூடியவர். இதுவே அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நாங்கள் இருவரும் பழகிய பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்ட போது அளவு கடந்த சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால் அந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லை. சில காரணங்களால் நாங்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் திருமணத்தின் போது எவ்வளவு சந்தோஷப் இருந்ததோ பிரியும் போது அதிக மனவேதனையுடன் தான் பிரிந்தோம்” என்று கூறியுள்ளார்