இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய படங்கள் வெளியானது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் .
Seeking blessings as we begin yet another journey 🙏🏻 #SaaniKaayidham@arunmatheswaran @selvaraghavan @Screensceneoffl @yaminiyag @ramu_thangaraj @Inagseditor @kabilanchelliah @sidd_rao @nixyyyyyy pic.twitter.com/W2yQNphvhm
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 26, 2021
இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .