பிரபல இயக்குனரின் வாழ்க்கையை மாற்றிய படம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் மற்ற இயக்குனர்கள் படங்களை விட பெரிதளவில் வித்தியாசமாகவே இருக்கும். அதற்கு உதாரணமாக புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை கூறலாம். ஆயிரத்தில் ஒருவன் சோழர் காலத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த படம் பெரிதாக தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்றாலும், தற்போது அந்த கதையின் தாக்கம் புரிந்து இன்றுவரை அதை பாராட்டி புகழ்ந்து தள்ளுகின்றனர்.
அதேபோல்தான் புதுப்பேட்டை, இயல்பான கேங்ஸ்டர் கதை போல் இல்லாமல், அவனுடைய முழு வாழ்க்கையையும் மையப்படுத்தி ஹீரோவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இறுதியில் அவரையே டம்மியாக காட்டும் கதை. தமிழ் சினிமா இதுவரை அப்படி ஒரு கேங்ஸ்டர் படத்தை பார்த்ததே இல்லை. அந்தப் படமும், ஆரம்பத்தில் தோல்வியை தழுவி சென்றாலும், பத்து ஆண்டுகள் கடந்த பின்பும் அதனுடைய புகழ் உச்சியில் நிற்கிறது.
ஆனால் செல்வராகவன் முதன்முதலாக இயக்கிய படம் துள்ளுவதோ இளமை. தனது தம்பி தனுஷ் வைத்து இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என நினைத்து முதல் காட்சிக்கு சென்று பார்த்துள்ளார். படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் இந்த படம் ஓடாது என்று கிண்டல் செய்துள்ளனர். இதைக் கேட்டு விட்டு சென்ற செல்வராகவன் வீட்டிற்கு சென்று மனமுடைந்து அமர்ந்திருந்தார். அதன் பின்,
மாலையில் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ஹவுஸ்புல் ஆக, அவரது அசிஸ்டன்ட் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறியதை அடுத்து தியேட்டர் தியேட்டராக சென்று பார்க்கும்போது துள்ளுவதோ இளமை திரைப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் அலைந்ததை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். எனவே துள்ளுவதோ இளமை திரைப்படம் தான் எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா என அவரது தந்தை பெயர் வரும் இந்த முடிவு வியாபார ரீதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.