Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

செல்போனில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுகுமார் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அறிந்த வாசுதேவன் செல்போனை கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் கூறியுள்ளார். இதனையடுத்து கண்ணன் சென்று சுகுமாரிடம் செல்போனை கேட்ட போது 1000 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் சமரசம் பேசப்பட்டு அந்த செல்போன் வாசுதேவனிடம் ஒப்படைக்கப்பட்டதனால் ஆத்திரமடைந்த சுகுமார் கண்ணனை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனைதொடர்ந்து தினசரி இரவு அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் வீட்டு திண்ணையில் தான் உறங்குவார். ஆனால் சம்பவத்தன்று அந்தத் திண்ணையில் அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் என்பவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுகுமார் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணன் என்று நினைத்து ஆறுமுகத்தை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ஆறுமுகம் வலி தாங்காமல் துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், தனிப்பிரிவு அரிராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற சுகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |