Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பேசுவது போல் நடித்து… வாலிபரின் செயல்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பட்டபகலில் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரியங்குழி பகுதியில் விவசாயியான முத்து கண்ணு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி இருக்கிறார். இவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சவுந்தரம் வெண்மான் கொண்டான் பகுதியிலுள்ள அமைந்துள்ள நிலத்திற்கு சென்று தனது ஆடு மாடுகளுக்கு போடுவதற்காக தீவன புற்களை அறுத்து கட்டுக் கட்டி தனது தலையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் தனது மொபட்டில் சென்று யாருமில்லாத இடத்தில் மொபட்டை நிறுத்தி செல்போன் பேசுவது போல் பேசிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து சவுந்தரம் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்த இடத்தை தாண்டி சிறிது தூரம் சென்றபோது அந்த வாலிபர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு திடீரென்று சவுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சவுந்தரம் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள் அந்த வாலிபர் சவுந்திரம் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து சவுந்தரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பிச் சென்ற வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |