Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்றால்… உரிமம் ரத்து செய்யப்படும்… பால்வளத்துறை அமைச்சர் அதிரடி…!!

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற பின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த 5 கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் ஒன்று. இது மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பால் விற்பனை செய்யப்படும் பகுதிகளிலும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இருப்பினும் பல இடங்களில் பால் விலையை குறைக்காமல் முந்தய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதையடுத்து தமிழகத்தில் அதிக விலைக்கு பாலை விற்பனை செய்த 11 சில்லரை விற்பனை கடைகளின் உரிமத்தை ரத்து செய்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டார். கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்றால் பொதுமக்களும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |