Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகர் மனைவியுடன் செல்ஃபி…. குவியும் லைக்ஸ்…!!

பிரபல காமெடி நடிகர் மனைவியுடன் சேர்ந்து உள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது.

சினிமாவில் ஹீரோ, வில்லன் எப்படி முக்கியமோ அதேபோல காமெடி கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அப்படி காமெடி செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் பல நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அந்த வரிசையில் இருப்பவர் தான் பிரபல காமெடி நடிகர் சதீஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தட்டுத் தடுமாறித் தான் வந்தார்.ஆனால் இவரது திறமையான நடிப்பின் மூலமாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது அவர் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருக்கிறார்.

இதற்கிடையில் அவர் அவ்வப்போது கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை.ஏதாவது பெண் இருந்தால் சொல்லுங்களேன் என்று காமெடியாக பேசி வந்தார். அதன்பிறகு அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த ஆரம்ப கட்டத்தில் தன் மனைவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சதீஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்ஃபீ  புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அன்று அவரது மனைவி சிந்துவின் பிறந்த நாள் என்பதால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிந்து என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குக்கள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CM1hQ7gpQ65/

Categories

Tech |