செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.
அதன்பின், அங்குள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வழியில், பால்ட் நீர்வீழ்ச்சியில் தனது வருங்கால கணவருடன் கமலா செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் இருவரும் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினர். இதில் அந்த இளைஞன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மயக்க நிலையில் மீட்கப்பட்ட கமலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.