Categories
தேசிய செய்திகள்

“தன்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்”… படுக்கையறையில் முன்னாள் காதலி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் மனைவியுடன் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

வீட்டில் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது காதலியும் அங்கு தங்கி இருந்தார். அவர் ராமுவின் தங்கை தோழி என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர் அனைவரும் தூங்கிய பின்பு காதலனான கோபால் ராமின் படுக்கை அறைக்கு சென்று ராமுவின் மனைவியின் கூந்தலை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் புது பெண்ணின் கண்ணில் ஃபெவிகாலையும் ஊற்றி உள்ளார்.

இதனால் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு அவர் கதறி அழவே, அங்கு இருந்தவர்கள் என்னானது என்று பதறிப் போக ஆரம்பித்தனர். அப்போது அந்த காதலி அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அனைவரும் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இளம் பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் புதுபெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காதலித்து ஏமாற்றிய காதலனை விட்டுவிட்டு மனைவியை பழிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபாலமின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளதால் ஏமாற்றப்பட்ட முன்னாள் காதலியின் தரப்பில் போலீசார் கருத்தை கேட்க தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |