10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்மிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் 10ம் தேதி – சமூக அறிவியல், ஜூன் 6ம் தேதி – விருப்ப மொழிப்படம், ஜூன் 12ம் தேதி – தொழிற்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்மிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் படிக்கும் அதே பள்ளியில் தேர்வுகள் எழுதலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.