Categories
உலக செய்திகள்

“செல்பி மோகம்” தூக்கி வீசிய ஆழிபேரலை….. கடலுக்குள் சென்ற வாலிபர் மாயம்….!!

அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில்  சாண்டா குரூஸ் கடலின் உள்பகுதி பாறையின் மீது  ஒருவர் ஏறி நின்று கடல் அலையை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த வாலிபரை தூக்கி வீசி எறிந்தது.

பின் மீண்டும் வந்த மற்றொரு பெரிய அலை அவரை  பின்னால் தள்ள அலையின் தாக்கத்தில் வாலிபரும் இழுத்து செல்லப்பட்டு கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Categories

Tech |