Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது… வசமாக சிக்கியவர்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஏரி மணல்களை கடத்துவதற்கு பயன்படுத்த பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி எந்திரம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தப்பூர் கிராமத்தில் இருக்கும் சீத்தேரி பகுதியில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.சி.பி மூலம் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது சீத்தேரி பகுதியில் அரசு அனுமதியின்றி ஜே.சி.பி எந்திரம் மற்றும் டிப்பர் லாரி மூலம் சிலர் ஏரியில் இருக்கும் மணல்களை கடத்த முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்த முயற்சி செய்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |