நூறு செயற்கைக்கோள்களை சுமந்து வானில் பறந்த ராட்சத பலூன்களை ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் தெலுங்கானா கவர்னர் தொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் மாணவர்கள் செயற்கைக்கோளுடன் கூடிய இரண்டு ராட்சத பலூன்களை உருவாக்கினர். அதை வானில் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 100 நாட்களில் 100 செயற்கைக்கோள்களை உருவாக்கி 1200 மாணவர்கள் சாதனை புரிந்துள்ளார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் பலூன்களில் அடிப்பகுதியில் கட்டப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டன. இச்சாதனையை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது ,”அவர் பேசிய உரையாடலில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங் களில் உள்ள மாணவர்களின் சாதனையை தெலுங்கான கவர்னர் பாராட்டியுள்ளார். இந்த சாதனையில் பிரமோஸ் ஏவுகணை முன்னாள் திட்ட இயக்குனர் சிவதாணு பிள்ளை மாணவர்களை ஒருங்கிணைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆனந்த மகாலிங்கம் மற்றும் அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் இந்தியாவின் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அவர்களின்பெ அவர்களின் பெற்றோர்களின் சமூக ஆர்வலர்கள் பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
சாதனை புரிந்த மாணவர்களால் உருவாக்கி பறக்க விடப்பட்ட 2 பலூன்களும் மாலை நாலு மணி அளவில் 200 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்றனர். அவ்வாறு பறக்கவிட்ட பலூன்கள் கோவில் வெடித்து பேரா சூட்டுடன் கோள்கள் மட்டும் தரையிறங்கினார். அச்செயற்கைக்கோள்களில் பதிவாகியுள்ள தகவல்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.