Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தாமரை மலரும்” – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில்  உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன்  பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக்  கொண்டிருந்தார். தற்போது  என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும்  தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும். சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தேர்தலிலும் பாஜக-வே  வெற்றி பெற்றது.

காஷ்மீர்  முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும். மேற்கு வங்கத்திலும் இது நடக்கும். அங்கு பாஜக பெரிய அளவிலான வெற்றியை பெறும்”  என்றார். அதற்கு பிறகு விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சையது ஷாநவாஸ் ஹுசைன், “மத்திய அரசு விவசாய சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பிரச்சனைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்” என்றார்.

Categories

Tech |