வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தர்களையும் அமெரிக்கா மீட்டு வருகின்றது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் தலீபான்களை நம்புகிறீர்களா? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலாக அதிபர் ஜோபைடன் கூறியதாவது “நான் உங்களை உட்பட எவரையும் நம்பவில்லை. நான் நம்பவும் மாட்டேன். நான் உங்களை விரும்புகிறேன். ஆனால் நம்பவில்லை. தலீபான்கள் விரைவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.