ஆகஸ்ட் 8, 1942 வெள்ளையனே வெளியேறு முழக்கம் தொடங்கிய நாள் இந்திய விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல பல கட்ட போராட்டங்களை தாண்டிய பிறகே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.
விடுதலைப் போராட்டங்களில் முக்கியமானது வெள்ளையனே வெளியேறு முழக்கம் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் எட்டாம் நாள் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தான் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் காந்தியடிகளால் முன்மொழியப்பட்டு இயக்கமாகக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தான் “செய் அல்லது செத்து மடி” என்று முழங்கினார் மகாத்மா.
போராட்டம் வலுவடையும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு அடுத்த நாள் ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் காந்தி உட்பட காங்கிரசின் முக்கிய தலைவர்களை கைது செய்தது தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் போராட்டம் தொடர்ந்தது. எனினும் ஓராண்டுக்குள் ஆகவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. இருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் முழுமையாக பங்கேற்க இந்தப் போராட்டம் வழிவகுத்தது.