நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆட்சி வரைவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஆட்சி வரைவை வெளியிட்டு வருகின்றது. அந்த ஆட்சி வரைவில், டென்மார்க்கை போன்று ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் தென்கொரிய நாட்டை போன்று அனைவருக்கும் சமமான கல்வியை இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீமான் கூறியதாவது, உலகிலேயே ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க் தான். அதற்குக் காரணம் என்னவென்றால் அதன் வெளிப்படையான நிர்வாகம். அது போன்று நான் தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்க விரும்புகிறேன். கல்வியில் சிறந்த நாடாக விளங்கும் தென்கொரியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தென்கொரியா போன்று அனைவருக்கும் சமமான தரமான கல்வியை இலவசமாக வழங்குவேன்” என்று உறுதி அளித்துள்ளார்.