நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனடா அரசின் தமிழ் சமூக மையம் அமைக்கும் திட்டத்திற்காக உலக தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ் சமூக மையம் உருவாக்க கனடா ஒன்றிய அரசு மற்றும் ஒன்ராறியோ மாநில அரசு சேர்ந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருப்பது மனதை நெகிழச்செய்கிறது.
தங்களை நம்பி வந்த தமிழர்களை வரவேற்று ஆதரிப்பதோடு அவர்களின் கடந்தகால துன்பங்களின் காயங்களை சரிசெய்து மற்றொரு தாய்மடி போல் கனடா திகழ்கிறது. அதேபோன்று தங்களை வாழ வைக்கும், கனடாவின் மேம்பாட்டிற்காக தமிழர்கள் அயராமல் பாடுபடுகிறார்கள்.
இந்த புதிய தமிழ் சமூக மையமானது, வெளிவிளையாட்டரங்கம், கலையரங்கம், நூலகம், பல்வேறு கல்வி பொழுதுபோக்கு பகுதி, பண்பாட்டுக் கூடம், பல்நோக்கு வசதிகொண்ட அருங்காட்சியகம், மனநலசேவைகள், பெரியோர்களுக்கு மகிழ்ச்சி தருமிடம், போன்றவைகளை கொண்டிருப்பது சிறப்பாகவுள்ளது.
'தமிழ்ச் சமூக மையம்' அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!https://t.co/pYQYmKoFfE@JustinTrudeau @ONgov #TamilCommunityCentre pic.twitter.com/Sz5ma0WK2n
— சீமான் (@SeemanOfficial) July 24, 2021
அதிக சிறப்பு வாய்ந்த தமிழ்ச் சமூக மையம் அமைக்க திட்டமிட்ட கனடா ஒன்றிய அரசு, மற்றும் ஒன்ராறியோ ஒன்டாரியோ மாநில அரசுக்கும் உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம். மேலும் தமிழ்ச் சமூக மையத்தை அமைக்க முயற்சி மேற்கொண்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும், என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்!.
வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்! என்று குறிப்பிட்டுருக்கிறார் சீமான்.