2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதிலும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளது என்பது குறித்தும் அல்லது தனித்து கட்சிகள் போட்டியிடுமா என்பது குறித்தும் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக நின்று வந்த நாம் தமிழர் கட்சி 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய சீமான், வரும் தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் கூட்டணி என்பது கிடையாது. மக்களை தான் நான் முழுமையாக நம்புகிறேன். அவர்களே எங்களின் வலிமை மிக்க கூட்டணி என கூறியுள்ளார்.